மீள்குடியேற்றப் பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளுக்குக் கைகொடுக்க அன்புடன் வரவேற்கின்றோம்
நீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில், மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த திருமதி ரவிராச் கம்சிகா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குழாய்க் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
அத்துடன், மோட்டார் பொருத்தப்பட்டு, தேவையான குழாய் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இத்திட்டம் முழுமையாக நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களைக் கடந்து மீள்குடியேறிய மக்களின் தாகம் தணிக்க எமக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக, அனைவருக்கும் பொதுவான இயற்கைச் சக்திக்கு நன்றி கூறி நிற்கின்றோம்.
இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற எமது நிறுவனத்திற்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய இலண்டனைச் சேர்ந்த திரு. நா. காண்டீபன் மற்றும் திரு. சி. கதிரவேலு ஆகியோருக்கு, நிறுவனத்தின் சார்பிலும் பயனாளரின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மீள்குடியேற்றப் பிரதேசங்களில் எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளுக்குக் கைகொடுக்க விரும்பும் அன்புள்ளங்களை நாம் அன்புடன் வரவேற்று நிற்கின்றோம்.











Previous Post
