Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

புதிய வாழ்வு நிறுவனத்தின் – பயனாளிகள் சந்திப்பும் கலந்துரையாடலும்

புதிய வாழ்வு நிறுவனத்தின் பயனாளிகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி தையிட்டி பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தையிட்டி J /250 கிராமசேவகர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கிராமசேவை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்கள், புதிய வாழ்வு நிறுவனத்தில் இருந்து உதவிபெறும் குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் புதியவாழ்வு நிறுவன பெண்கள் குழு உறுப்பினர்கள், சிறு சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்விற்கு புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் திருமதி புனிதவதி நடனேஸ்வரன் அவர்கள் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பெண்கள் மற்றும் தொழில் முனைவோர் தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் உதவி கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர், மேலும் இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக தையிட்டி J/250 கிராம சேவையாளர் பிரிவிலிருந்து கிராம சேவகர் உத்தரகுமாரன் கலாநிகேதன் மற்றும் J/250 கிராம அலுவலர் லாவண்யன் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நிரோஜன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் J/247 பிரிவை சேர்ந்த பஞ்சலிங்கம் கிரிதரன் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் தையிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களான தனுஜா மற்றும் சிவநந்தினி சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் மக்களுடன் கலந்துரையாடி மீளக்கூடியேறி உள்ள மக்களினுடைய தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

தையிட்டி பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு குடிநீர் வசதியை பெற்றுக் கொடுக்கும் முகமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குடிநீர் பெறுவதற்கு வசதியான கிணறுகளை வெட்டி கொடுத்திருக்கின்றார்.

மக்களினுடைய நன்றி தெரிவிப்போடும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் கருத்துரைகளோடும் மக்களுடைய தேவைகள் மற்றும் அவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய அவசர உதவிகள், சுய தொழிலை மேம்படுத்துவதற்கான சிறு கைத்தொழில் மையங்கள் என்பவற்றை ஏற்படுத்துவது தொடர்பாக புதிய வாழ்வு நிறுவனத்தினுடைய தலைவர் ஆலோசனைகளை நடத்தினார்.

இதன்படி மீளக்கூடியேறி உள்ள மக்களுக்கு மிக விரைவில் சிறு கை தொழில்களுக்கான உதவிகள் வழங்கப்பட இருப்பதோடு, சிறு கைத்தொழில் மையங்களும் அங்கே அமைக்கப்பட உள்ளமை சிறப்பான விடயமாகும். நிகழ்வில் பெருமளவான மக்களும் அரச பிரதிநிதிகளும், நலன்விரும்பிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.