உடைகளும் உணவும் வழங்கும் நிகழ்வு!
புதிய வாழ்வு நிறுவத்தின் இலண்டன் இயக்குனர்களில் ஒருவரான
திரு. தர்மலிங்கம் பிரபாகரன் அவர்கள்,தனது தந்தையாரின் பிறந்த நாளும், மனைவியின் தாய்தந்தையாரான திரு.திருமதி. கிருஸ்ணசாமி யோகேஸ்வரி அவர்களின் திருமணநாளையும் முன்னிட்டு, வன்னியில் வாழும் முதியோர்களுக்கு தன் தந்தைசார்பாகவும், மாமன், மாமி சார்பாகவும் தந்தையின் கையால், உடைகளும் உணவும் வழங்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வானது தந்தையின் பிறந்தநாளையும் மாமனாரின் திருமணநாளையும் கொண்டாடுவது மட்டுமன்றி உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், “ அச்சுதன் கைத்தறி நெசவு நிலையத்தில் இருந்து ஆண்களுக்கான சாரங்களும், NLF FASHION பெண்கள் குழுவிடம் இருந்து தாய்மாருக்கான ஆடைகளுமாக, 90 ஆடைகளைப்பெற்று உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உற்சாகத்தைக்கொடுத்துள்ளார். என்பது மிகவும் பாராட்டுதற்குரியது. முன்னோடியாக திகழ்ந்த பிரபாகரனைப்பின்பற்றுவோம், உங்களது வீடுகளில் ஒரு நல்லவிடயமோ, அல்லது ஞாபகநிகழ்வுகளோ நடக்கும்போது அவர்களின் நினைவாக உள்ளூர் உற்பத்தியாளர் ஒருவருக்கு ஒருவாய்ப்புக்கொடுக்க முன்வரவேண்டும் என்ற எமது நிறுவனத்தின் கொள்கைகளுக்கு வழிகாட்டியாகச்செயல்பட்ட தம்பி பிரபாகரனைப்பாராட்டி நிற்கின்றது புதிய வாழ்வு நிறுவன நிர்வாகசபை..,
இந்த நிகழ்விற்கான நிதியினை பிரபாகரனும் , தனது மைத்துணனான k. கோபிரஞ்சன் அவர்களும் இணைந்து கொடுத்துள்ளனர்.
இதுபோன்று, நமது மக்கள் ஊரிலோ, வெளிநாடுகளிலோ, எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்தும் போது,
உள்ளூரில் இருக்கும் முதியோர்கள், சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உள்ளூர் முயற்சியாளர்களை நினைவில் கொண்டு சிறு, சிறு நம்பிக்கையூட்டும் உதவிகளை செய்ய முன்வரவேண்டுமென, அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.






Previous Post
Next Post
