சிரட்டையில் வடிவங்கள் செய்யும் பயிற்சி நிகழ்வு
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் ஊடாகவும், தேசிய அருங்கலைகள் பேரவையின் ஒருங்கிணைப்புடனும், சிரட்டையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்கும் ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சி 2026 ஜூலை 15 முதல் 19 ஆம் திகதி வரை கந்தர்மடம் பொதியிடல் நிலையத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி நிகழ்ச்சியில் 18 பயிற்சியாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, சிரட்டையைப் பயன்படுத்தி அழகிய வடிவங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கான நடைமுறைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இப்பயிற்சிக்கு மத்திய மாகாணத்திலிருந்து துறைசார் அனுபவமும் திறமையும் கொண்ட சிறந்த வளவாளரான வசந்த பெர்ணான்டோ அவர்கள் கலந்துகொண்டு, பயிற்சியாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறைப் பயிற்சிகளை வழங்கினார்.
மேலும், தேசிய அருங்கலைகள் பேரவையின் கோரிக்கைக்கு அமைவாக வளவாளரை கண்டியிலிருந்து அழைத்து வருவதற்கு New Life Foundation அமைப்பினரும் தமது பெறுமதியான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
இப்பயிற்சியின் மூலம் சிரட்டை போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட கைவினைப் பொருட்களை உருவாக்கும் திறனை வளர்த்துக்கொள்வதுடன், எதிர்காலத்தில் இத்துறையின் ஊடாக சுயதொழில் மற்றும் வருமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பயிற்சியாளர்களுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த பயிற்சி நெறியில் New Life Foundation அமைப்பின் பங்களிப்பு குறிப்பிடதக்கது.
இத்தகைய பயிற்சிகள் பாரம்பரிய கைவினைக் கலையைப் பாதுகாப்பதுடன், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.








Previous Post
Next Post
