தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கான Paper Quilling Art பயிற்சி வகுப்பு
ஒரு பெண்ணின் கைகளில் இருக்கும் திறமையானது, அவளது குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்றால் அது மிகையாகாது. அவ்வாறான திறமைகளைக் கண்டறிந்து, உரிய பயிற்சிகளை வழங்குவதன் மூலம் தன்னம்பிக்கையுடன் கூடிய வாழ்வாதாரங்களை உருவாக்கி, பெண்களை தனித்துவமாகவும் கௌரவமாகவும் வாழ வைப்பதற்காக எமது நிறுவனம் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
அந்த வகையில், எமது நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த திருமதி புஷ்பகாந்தன் உஷாளினி (INZPRO HANDCRAFT) அவர்களின் நெறியாள்கையில், தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கான Paper Quilling Art பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
இப்பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் ஏனைய செலவுகளுக்கான முழுமையான நிதிப் பொறுப்பை திரு. கு. விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்றுக்கொண்டார். சமூக அக்கறையுடன் இப்பணிக்கு உறுதுணையாக இருந்த திரு. கு. விக்னேஸ்வரன் அவர்களுக்கும், திறம்பட பயிற்சிகளை வழங்கிய பயிற்றுநர் திருமதி பு. உஷாளினி அவர்களுக்கும் எமது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இப்பயிற்சியில் 18 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றிருந்தனர். அவர்களில் மிகுந்த ஆர்வத்துடனும் திறமையுடனும் செயல்பட்ட 5 பெண்களுக்கு உடனடியாக தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டதோடு, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ள வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கும் குழுவுடன் இணைக்கப்பட்டு மேலதிக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் எம்முடன் இணைந்து கரம் கோர்க்கும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது பதிவுகளை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எமது சமூகப் பணிகளுக்கு ஆதரவு வழங்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.







Previous Post
