Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்

புதிய வாழ்வு நிறுவனத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவரும், பனைசார் உற்பத்திகளில் வடமாகாணத்தில் முன்னிலை வகிப்பவருமான, திருமதி யு. லூசியாவின் கைவினைப்பொருட்களின் மாதிரிகளைக்காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

அயராது உழைக்கும் லூசியா தான் கற்றவித்தைகளை தனதுமணவர்களுக்கு கற்பித்துவருகின்றார், கிட்டத்தட்ட 70 மாணவர்களிற்கு பயிற்சிகொடுப்பதோடு, மிகவும் திறமைவாய்ந்தவர்களை தன்னோடு இணைத்து 15 மாணவர்களிற்கு வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளார் என்பது மிகவும் பெருமையான விடயமாகும்.

இவர்போன்று கடின உழைப்பாளிகளையும், திறமைசாலிகளையும், ஒன்றிணைத்து வேலைவாய்ப்புக்களை வழங்கி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் நோக்கமாகும், எமது நிறுவனத்தோடு பயணிக்கும் JR அச்சகம் … எமது உற்பத்தியாளர்களின் உற்பத்திக்கு ஒரு வாய்ப்புத்தந்துள்ளது என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

அவர்களின் அச்சகத்திற்கு திருமணவாழ்த்துமடலிற்காக வந்த வாடிக்கையாளர்களுடன் கதைத்து திருமணநாளில் திருமணத்திற்கு வருவோர்க்குக் கொடுக்கும் பரிசுப்பொருட்களுக்காக 800 பெட்டிகளை எமது உற்பத்தியாளர்களிடம் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த ஏற்பாட்டை எமக்குச்செய்துதந்த திரு. புலவர் பாலரவி JR அச்சக உரிமையாளர் அவர்களுக்கும், திருமணத்தம்பதிகளுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்🙏🥰

எமது பதிவுகளை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்வதுகூட, எமதுஉள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும். எனவே எமது மக்களுக்கு உதவி செய்யும் ஒரு பெரிய வாய்ப்பாக்க்கருதி எமதுபதிவுகளை பகிருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Comments are closed.