Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மலேசிய உறவுகளின் உதவி!!

மலேசியாவிலிருக்கும் எமது தமிழ் உறவுகள் தாங்களாக விரும்பி பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகளையும் உடுப்புகளையும் சேகரித்து இரு பெரிய பொதிகளில் மலையக மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.

அவை சென்றமாதம் கிடைக்கப்பெற்று மலையகத்திலுள்ள பல கிராமங்களிலிருந்து மிகவும் பொருளாதாரச் சிக்கலில் உள்ள மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு முழுமையாக ஒத்துழைப்புத்தந்து பொருட்களை வழங்கிவைக்க உதவியவர் புதிய வாழ்வு நிறுவனத்தின் மலையக மாணவப் பிரதிநிதி சரத்குமார். இவருக்கு நோர்வேக் கிளை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலேசியாவில் இப் பொருட்களைச் சேகரித்து பொதிபண்ணி அனுப்பி வைப்பதற்கு மிகவும் பாடுபட்ட சகோதரி உதயா அக்காவுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் உதயா அக்கா நீண்ட நலமோடும் நிறைந்த மகிழ்வோடும் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🎂🎉🎊🎈🎈🌸

Comments are closed.