மாணவிக்கு உந்துருளி அன்பளிப்பு!
03.11.24 அன்று இலண்டனில் உள்ள ஒரு சகோதரி சுவிசிலுள்ள தனது நண்பியின் மகன் கிரிசாந்தனின் 30வது பிறந்தநாள் பரிசாக அவரது பெயரிலே கிளிநொச்சியிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்திலுள்ள ஒரு மாணவிக்கு உந்துருளி ஒன்றை புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையினூடாக அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.
அந்தச் சகோதரிக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் கிரிசாந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ் உந்துளியானது 04.11.24 அன்று புதிய வாழ்வு நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் வைத்து அம் மாணவியிடம் கையளிக்கப்பட்டது.


Previous Post
Next Post
