Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மன்னார் மாவட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் மாலைநேர வகுப்புக்கள்!!

புதிய வாழ்வு நிறுவனத்தின், நோர்வேக்கிளையின் மேர்பார்வையில் மேற்கொள்ளப்படும் கல்விச்செயல்பாடுகளில் ஒன்றான மாலைநேர வகுப்புக்களாவன மிகச்சிறப்பான முறையில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது,

ஆரம்பக்கல்விக்கான தேவைப்பாடுகள் உள்ள கிராமங்களாக தெரிவுசெய்யப்பட்ட பெரியமடு, விடத்தல்தீவு, அந்தோனியார்புரம், வளர்நகர், தேவன்பிட்டி, யோசெப்வாஸ்நகர் போன்ற பகுதிகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களால் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றது,

கிராம்ப்புறங்களில் கல்விச்செயல்பாடுகளைத்துரிதப்படுத்துவதுடன், கற்றலின் தேவையுடன், நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதையும் வலியுறுத்திவருகின்றோம், தொடர்ந்து சிறப்பாக இயங்கிவரும் நோர்வேக்கிளைக்கு நன்றிகூறுவதுடன், எம்மோடு பயணிக்கும் ஆசிரியர்கள், எமக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோர்கள், மேற்பார்வைசெய்யும் திரு. ஐ.சுதர்சன், ஆசிரியர்களுக்கு தொடர்ந்தும் கொடுப்பனவு செய்துவரும் இயக்குனர் திரு. தர்மலிங்கம் பிரபாகரன் மற்றும் எம்மோடு இணைப்பினை ஏற்படுத்தி எமக்குத்தரவுகளைத் திரட்டித்தரும் திரு.வி.சு.விஜயலாதன் அவர்களுக்கும் நன்றிகள் கூறக்கடமைப்பட்டுள்ளோம்

Comments are closed.