துணுக்காய்ப்பிரதேச கல்விவலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கிவைப்பு!!
முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய்ப்பிரதேச கல்விவலய முன்பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோள்களை ஏற்று 75 ஆசிரியர்களுக்கான சீருடையாக சேலை வழங்கும் வைபவம் ஆனது 19/ 07/ 24 அன்று, துணுக்காயில் இடம்பெற்றது,
இத்திட்டமானது நோர்வே அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடம் Lørenskog வளாகத்தினர் “அறம்” என்னும் திட்டத்தின் கீழ் எமது புதிய வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து மிகச்சிறப்பாக நிகழ்வை நடாத்தியிருந்தனர்,
வருங்காலத்தலைவர்களையும், பெருங்கல்விமான்களையும் உருவாக்கும் இந்த முற்றுமுழுதான சேவைநோக்கம் கொண்ட ஆசிரியர்கள் மதிக்கப்பட்டுப், போற்றப்பட வேண்டியவர்கள், அதன் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளானது நிறைவேற்றப்பட்டது.
இந் நிகழ்வில் கௌரவ தங்கராஜா லோகேஸ்வரன் ( உதவிக்கல்விப்பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம், துணுக்காய்) மதிப்பிற்குரிய திரு.தங்கராசா பிரதீப், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர், மாந்தை கிழக்கு பிரதேச செயலகம், மதிப்பார்ந்த ஆசிரியர் திரு.சுபநேசன், யோகபுரம் மகாவித்தியாலயம், மல்லாவி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவர்களுடன் பெருமளவிலான முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு தமது அன்பையும், ஆதரவையும் தெரிவித்திருந்தனர்,இத்திட்டத்திற்கு தரவுகள் திரட்டி, மேல் அதிகாரிகளின் அனுமதி பெற்று மிகச்சிறப்பாகச் செயல்பட்ட பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் தலைவரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் திட்ட இணப்பாளருமான திரு. வி.சு. விஜயலாதன் அவர்களைப்பாராட்டி நிற்கின்றோம்.
இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்த, மற்றும் உதவிகள் புரிந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு.இத்திட்டத்திற்கான நிதி உதவியைச்செய்த நோர்வே அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்திற்கும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
