Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

புங்குடுதீவிலுள்ள காந்தி முன்பள்ளிக்கு உதவித்திட்டங்கள்!!

4ம் வட்டாரம் புங்குடுதீவிலுள்ள காந்தி முன்பள்ளிப்பிள்ளைகளுக்கான மேசைகளும் கதிரைகளும் ஆசிரியருக்கான கதிரையும் மற்றும் மாணவர்களுக்கான சீருடையும் நோர்வே புதிய வாழ்வு நிறுவனத்தினரால் 18//7-24 வியாழக்கிழமையன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

தளபாடங்களுக்கான நிதி அனுசரணையை கனடாவிலுள்ள திரு ரவிசங்கர் தம்பதிகளின் பிள்ளைகள் Kaeshev, Kanishaa & Thameira வும் சீருடைக்கான நிதிப் பங்களிப்பை இலண்டனிலுள்ள விஜயகுமார் பத்மினி தம்பதிகளும் வழங்கியுள்ளனர்.

இவர்களுக்கு புதிய வாழ்வு நிறுவனத்தினர் கரம்பற்றி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்வில் புதிய வாழ்வு நிறுவனத்தின் திட்ட நிறைவேற்றுப் பொறுப்பாளர் திரு.விஜயலாதன், தீவக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பவானந்தன், புங்குடுதீவு கிராமசேவகர் திரு. கிறிஸ்தி யுவராஜ், சமூகசேவையாளர் திரு. ஜெயசீலன் மற்றும் புதிய வாழ்வு நிறுவனத்தின் மாணவப் பிரதிநிதி செல்வன் விதுஷனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வைச் சிறந்தமுறையில் ஒழுங்கமைத்து, சிறப்பாக நிகழ்த்திமுடித்த காந்தி முன்பள்ளியின் செயலாளரும் ஆசிரியருமான செல்வி. ஜீபோன் லோகநாதன் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மிக மகிழ்ச்சியடைகிறோம்.

அத்துடன் இத் தளபாடங்களை நேர்த்தியாகச் செய்துமுடித்துத் தந்த சுஜீ தளபாடத் தொழிலகத்தினருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments are closed.