Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாற்றுத் திறனாளிகளுக்கான இசைப்போட்டி

சாவிகா சங்கீத அறிவாலயமானது, இசையால் வசமான இளைஞர்கள் ஒன்றிணைந்து, விசேட தேவையுடையவர்களின்‌ இசைத்ததிறன்‌ மற்றும்‌ அவர்களின்‌ ஆளுமைத்திறனை வளர்க்கும்‌ நோக்கில் , மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின்‌ திறமைகளை மேம்படுத்துவதன்‌ மூலம்‌, அவர்களை இயல்பு வாழ்விற்கு கொண்டுவர, இசையை ஓர் ஆயுதமாக கொண்டு இயங்கி வருகின்றது., இவ்வமைப்பின்‌ மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பாட்டு,வயலின்‌,கீ போர்டு,மிருதங்கம்‌ என்பன இலவசமாக பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றது,

இந்த இளைஞர்களின் முயற்சியை எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டனர், வியந்தனர். அதன் விளைவே இந்தப் போட்டித்தேர்விற்கான அடித்தளம், எனவே அவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை நடாத்த நாம் முன்வந்துள்ளோம், இசைத்திறமையுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் பங்குபற்றி உங்கள் திறமைகளை காட்டுமாறு மிக அன்பாகவும், உரிமையாகவும் கேட்டுக்கொள்கின்றோம் 👍🙏
மேலதிக தொடர்புகளிற்கு
+94 76 877 5188
+94 775886041

Comments are closed.