கல்வி வளர் நிலைய ஆரம்ப நிகழ்வும், சேமிப்பு வைப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வும்!!
கடந்த 15.12.2022 அன்று, புதிய வாழ்வு நிறுவனத்தின் நெறியாள்கையில் மன்னார் மாவட்டம் ஓலைத்தொடுவாய் வளநகர் மற்றும் இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் ஆகிய கிராமங்களில், வாழ்வாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களைக்கொண்ட மாணவர்களுக்கு , மாலை நேர இலகுகற்றல் வகுப்புக்களை நடாத்துவதற்காக, புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வி வளர் நிலைய ஆரம்ப நிகழ்வும் புதிய வாழ்வு நிறுவனத்தின் சிறுவர் சேமிப்பு திட்டத்தினுடாக 34 மாணவர்களுக்கு தலா 2,000.00 ரூபா பெறுமதியான சேமிப்பு வைப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வும் மன்னார் ஓலைத்தொடுவாய் அ.த.க பாடசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், குறித்த கிராமத்தின் கத்தோலிக்க பங்குத்தந்தை, கிராம அலுவலர், சமூர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்களுடன் புதிய வாழ்வு நிறுவனத்தின் தலைவர், செயற்றிட்ட இணைப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு , நிகழ்வினை நடாத்தியிருந்தார்கள், பங்குபற்றிய, சிறப்பித்த, அனைத்துவித்த்திலும் உதவிகள் புரிந்த அனைவருக்கும் இதய பூர்வ நன்றிகள் 🙏





Previous Post
Next Post
