Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

திரு.ந.கலைச்செல்வன், திரு.ஜோகராஜா ஆகியோரின் நினைவாக உதவித்திட்டங்கள்!!

கடந்த 06.12.2022 அன்று , வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, எம்மோடு கல்விகற்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரணசூழல்களால் கல்வியையும் தொடரமுடியாது, வாழ்வையும் தொடரமுடியாது மண்ணுக்கு விதையான எமது நண்பர்களான, திரு.ந.கலைச்செல்வன், திரு.ஜோகராஜா ஆகியோரின் நினைவாக , அவர்கள் நேசித்த மண்ணை வழப்படுத்தி , மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் விவசாய ஊக்குவிப்புத்தொகையாக 6 குடும்பங்களிற்கு தலா 25000/- ரூபாவும் , மற்றும் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புதிய வாழ்வு நிறுவனத்தின் தலைவர் திரு. பா. பார்த்தீபன் , நகழ்ச்சித்திட்ட இணப்பாளர் திரு. வி. விஜயலாதன், மற்றும் புதிய வாழ்வு நிறுவனத்தின் நலன் விரும்பியும் ஆதரவாளருமான திரு. செ. ராகவன் ஆகியோரும் பங்கு பற்றிச்சிறப்பித்திருந்தனர். இச்செயல்திட்டத்தினை ஒழுங்கமைத்து, சிறப்புற நடாத்திய திரு. துவாரகன் அவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்🙏

இந்த நிகழ்விற்கான நிதியினை தந்துதவிய அனைத்து நல்லுள்ளங்களிற்கும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.

கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளிற்கும், கலைமகள் வாசிகசாலைக்கும் இதயபூர்வ நன்றிகள் 🙏

Comments are closed.