Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

அக்கரப்பத்தனை கிராமத்தில் விவசாய ஊக்குவிப்பு!! (Video)

இன, மத, மொழி வேறுபாடு இன்றி பயணிக்கும் எமது நிறுவனத்தின், அக்கரப்பத்தனை எனும் மலையக கிராமத்தில் அமரர் திரு.ஜிஷ்வி மரிக்கார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரின் உற்ற நண்பன் திரு. க. நிரஞ்சன் அவர்கள் ( கணநாதம் அருள் கட்டளையின் ஸ்தாபகர்) விவசாய ஊக்குவிப்பாக , ஒரு குடும்பத்திற்கு 20,000/- ரூபாவீதம் 20 குடும்பங்களிற்கான நிதியை 23/03/22 அன்று, எமது நிறுவனத்தின் செயல்திட்டங்களுக்கு அமைவாக, எமது மாணவப்பிரதிநிதிகளூடாக் வழங்கி இருந்தார்.

இதில் 10,000/- ஆரம்ப வேலைகளுக்காக 23/03/22 அன்று வழங்கப்பட்டது. மிகுதி 10,000/- ஆனது இரு வாரங்களில் வழங்கப்படும், இவர்கள் இந்த திட்டத்தின் ஊடாக இலாபம் பெறும் சந்தர்ப்பத்தில் , 10,000/- வினை நிறுவனத்திற்கு மீள தரவேண்டும், இந்த 10,000 ஆனது , மீண்டும் வேறு ஒரு குடும்பத்திற்கு ஆரம்ப வேலைகளுக்காக வழங்கப்படும். இத்திட்டத்தை மலையகத்தில் சுழற்சி முறையில் செய்து மக்களின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம்🙏

 

Comments are closed.