உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை மூலம் பெரும் இலாபம் ஈட்டிய இராமசாமி!!
மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில் எமது மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் திரு. இ. இராமசாமி என்பவர் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை மூலம் பெரும் இலாபம் ஈட்டி உள்ளார் என்பதை மனமகிழ்வோடு அறியத்தருகின்றோம்,
வீட்டில் உள்ள அனைத்து அங்கத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்ததோடு, அடுத்த ஆண்டிற்கான விதைகிழங்குகளும் தயாராக உள்ளதாக இராமசாமி கூறியுள்ளார்,
அவர் மேலும் கூறுகையில் இந்த ஆண்டு ஆரம்பகாலத்தில் முதலாவது போகத்தில் 1,80,000/- இலாபம் கிடைத்ததாகவும், இரண்டாவது போகமான கார்த்திகைமாதம் 2,95,000/- இலாபம் கிடைத்ததாகவும், இந்த திட்டத்தை மலையகமக்களுக்கு அறிமுகம் செய்து, தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவிசெய்த அனைவருக்கும் நன்றிகளைத்தெருவித்துக்கொண்டார்,
இந்த திட்டமானது, திரு.ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற முதலாவது முயற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கையேந்தும் நிலையை மாற்ற எமது நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எமக்கு கைகொடுக்கும் திரு. சி. பிரேம் அவர்களுக்கு இதயபூர்வ நன்றிகளை முயற்சியாளர்சார்பிலும், நிறுவனத்தின் சார்பிலும் தெருவித்துக்கொள்கின்றோம்.





Previous Post
Next Post
