Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாற்றுத்திறனாளிகளின் 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக, மாற்றுத்திறனாளிகளின் 100 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் 03/12/ 21ல் வழங்கிவைக்கப்பட்டது.

புதிய வாழ்வு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பிலும் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மாதர் அமைப்பின் ( WOWD) ஒழுங்குபடுத்தலிலும் இந்நிகழ்வு இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ளது.

கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகள் 60 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகள் 40 பேருமாக மொத்தம் 100 பேருக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் மூன்று பேருக்கும் 10000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் காலை 11.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மாதர் அமைப்பின் ( WOWD) தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைபற்று சமூக சேவை உத்தியோகத்தர், புதிய வாழ்வு நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எழுகை மாற்றுத் திறனாளிகளின் நிலையத்தில் மதியம் 2.00 மணிக்கு இடம் பெற்ற நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு எழுகை அமைப்பின் தலைவர் தலைமையேற்க நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், புதிய வாழ்வு நிறுவன முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.🙏

Comments are closed.