200 குடும்பங்களிற்கான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது!!
கண்டி மாவட்டத்தில், தெல்தோட்டை லிற்றில் வெளி எனும் கிராமத்தில் 200 குடும்பங்களிற்கான குடிநீர் தேவையானது வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதனை மனமகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
அரச செயல்திட்டத்தின் கீழ் 2019 ம் ஆண்டு மலையகத்திற்கான நீர்வழங்கல் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அரசியல்மாற்றங்களால் தொடராது, இடைநடுவே கைவிடப்பட்டநிலையில் மக்கள் குடிநீர்தேவையை பூர்த்திசெய்ய மிகவும் சிரம்ப்பட்டனர், இந்த நிலையில் கலாநிதி. பிரபாகரன் அவர்களுடன் எமது மாணவப்பிரதிநிதிகள் தொடர்புகொண்டு இந்த திட்டத்தை பூர்த்திசெய்வதற்கான செலவீனங்கள், தொழில்நுட்பங்களை கண்டறிந்து, எமது இயக்குனர்சபைக்கு தெருவித்திருந்தனர்,
அதன் அடிப்படையில் எமது நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு.சு.மகேசன் அவர்கள் தலைமையில் இத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு நிதிப்பங்களிப்புச்செய்த அனைத்து நல்ல உள்ளங்களிற்கும் இதய பூர்வ நன்றிகளைத்தெருவிப்பதோடு, மேற்பார்வை செய்த மாணவப்பிரதிநிதிகளான திரு. அழகுராஜா, விஜயகுமார் ஆகியோருக்கும், இத்திட்டத்தை எம்மிடம் தந்ததில் இருந்து இன்றுவரை, அனைத்துவிடயங்களைப்பற்றிய பூரண விளக்கம் தந்து, இரவு பகல்பாராது தன்னை அர்ப்பணித்து பணிபுரிந்த கலாநிதி பிரபாகரன் அவர்களுக்கும், மற்றும் எமக்கு தோள் தந்த தெல்தோட்டை அன்பான மக்களுக்கும், அரச அதிகாரிகள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் அனைவரிற்கும் எமது இதய பூர்வ நன்றிகளும், பாராட்டுக்களும். 👏👏👏🙏🙏.





Previous Post
Next Post
