ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள்!!
மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டமான ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள் முறையே..
1) மட்டக்களப்பு புல்லுமலையைச்சேர்ந்த திருமதி. இராஜசிங்கம் திருச்செல்வி, இந்த முயற்சியாளர்ஒரு பெண்தலைமைத்துவ குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதோடு, பன்புல்லில் பாய், தொப்பி போன்ற கைவினைப்பொருட்களை திறம்படச் செய்யக்கூடியவர், ஆதலால் பன்புல்லு அடிக்கும் இயந்திரத்திற்காகவும், வீட்டுத்தோட்டத்தை விருத்தி செய்வதற்காகவும் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
2) மட்டக்களப்பு செங்கலடியைச்சேர்ந்த திருமதி.வைரமுத்து செல்வராணி என்பரும் பெண்தலைமைத்துவகுடும்பத்தைச்சார்ந்தவர், இவர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, பாய் பின்னும் தறி மற்றும் அதற்கு தேவையான முதலீடுகளை கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சரூபா வழங்கப்பட்டது.
3)திரு. லோ. கேதீஸ்வரன் இவர் சாதிக்கத்துடிக்கும் ஒரு முயற்சியாளர், என்பதோடு அனைவரையும் திரும்பிப்பார்க்கவைத்த ஒரு மாற்றுத்திறனாளி, இவரது கோழி வளர்ப்பை ஊக்குவிப்பதோடு, அசோலா தீவன வளர்ப்பையும் ஊக்குவிக்கும்நோக்கில் ஒரு இலட்ச ரூபா வழங்கப்பட்டது.
4) மன்னாரைச் சேர்ந்த செல்வி. ஜீவரட்ணம் ஜீவிதா இவர் விழிப்புலன் அற்ற மாற்றுத்திறனாளி, தாயாரின் உதவியோடு, அவரது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் கோழிவளர்ப்பிற்காக ஒரு இலட்சம் ரூபா வளங்கப்பட்டது.
5) மட்டக்களப்பு பெரிய நீலாவணையைச்சேர்ந்த திருமதி. சி. தனுசா இவர் பெண்தலைமைத்துவ குடும்பத்தைச்சேர்ந்தவர், இவர் பனை ஓலையில் செய்யப்படுகின்ற கைவினைப்பொருட்களை விற்பனை செய்வதன்மூலம் குடும்பத்தை நடாத்திவருகின்றார், இவரது விற்பனையைக்கூட்டும் நோக்கில் இவருக்கு ஒரு இலட்சரூபா வழங்கப்பட்டது.
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் ஞாபகார்த்தமாக, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் , திரு, பிறேம் அவர்களால் வழங்கப்படும் நிதியில், எமது மாணவப்பிரதிநிதிகள் சுயதொழில் திட்டங்களை, உருவாக்கி மேற்பார்வை செய்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு நிதி உதவி செய்துவரும் அன்பான பிறேமிற்கும், மிகவும் அக்கறையோடு பயணிக்கும் எமது மாணவப்பிரதிநிதிகளுக்கும் இதய பூர்வ நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்.🙏





Previous Post
Next Post
