திருவையாறு மத்திய மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கை ஆரம்பம்!!
கிளி/ திருவையாறு மத்திய மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான, வெறும்தரையாக இருந்த மூன்று ஏக்கர் காணியானது எமது நிறுவனத்தின் விவசாய நடவடிக்கைகளுக்காக, திருவையாறு மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும், எமது நிறுவனத்தின் பொறியியல்துறை / விவசாயத்துறைக்கு பொறுப்பாக இருக்கும் திரு. வி. கேதீஸ்வரன் என்பவருக்கு வழங்கப்பட்டு, விவசாய நடவடிக்கைகளானது,பழைய மாணவர்களின் உதவியுடனும், அதிபர், ஆசிரியர்களின் ஆசிகள், ஆலோசனைகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து ஆசி வழங்கிய பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு. பொ. அற்புதராஜா, மற்றும் திருவையாறு/ கனகாம்பிகைக்குள விவசாய போதனாசிரியர்களுக்கும் இதய பூர்வ நன்றிகளை எமது நிறுவனம் சார்பில் தெருவித்துக்கொள்கின்றோம்.
மிகவும் முற்போக்கு சிந்தனையுடைய திருவையாறு மத்திய மகாவித்தியாலய அதிபர் திரு. கி. விக்னராஜா அவர்களின் சிறந்த சமூகச்சிந்தனையும், சமூக அக்கறையும் கண்டு பெருமிதம் அடைகின்றோம் 🙏,
நிகழ்வில் பங்குபற்றி இத்திட்டம் வெற்றிபெற வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களிற்கும் நன்றிகளைத் தெருவித்துக்கொள்கின்றோம் 🙏





Previous Post
Next Post
