Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவி!!

“அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.”

கடந்த ஆவணிமாதம் 10ம் திகதி, பம்பரகலை தோட்டம்,தலவாக்கலை எனும் கிராமத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தால் அண்ணளவாக 25 குடும்பங்கள் அனைத்தையும் இழந்து, நிர்க்கதியாக இருப்பதை அறிந்த எமது மாணவப்பிரதிநிதிகள் , மலையகம் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் தங்கி, அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, அத்தியாவசியப்பொருட்களை வழங்கி, நாம் இருக்கின்றோம் தோழ் தருவோம் என ஆறுதல்கூறி வந்துள்ளனர்,

இந்த ஆபத்தான நேரத்தில் எமது மாணவப்பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்ட தோட்டங்களில் இருந்தே மரக்கறிகளை பெற்று மக்களுக்கு வழங்கிஇருந்தனர் என்பது, துன்பத்திலும் ஒரு சின்ன சந்தோசம் வரத்தான் செய்கின்றது…

இந்த நிவாரணத்தை கொடுப்பதற்கு உதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பலகோடி 🙏, வெற்றிகரமாக செயல்திட்டத்தை செய்துமுடித்த அனைத்து மாணவமணிகளுக்கும் பாராட்டுக்கள் 👏👏👏

Comments are closed.