முல்லைத்தீவு – நெசவுசாலைக்கு நிதிஉதவி
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வன்னியில் இயங்கி வரும் அச்சுதன் நெசவுசாலைக்குப் பொறுப்பானவரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் உபதலைவருமாகிய திருமதி ப. தர்சினி அவர்கள் தான்கற்றுக்கொண்ட நெசவுக்கலையை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற இடங்களில் பெண்கள் குழுக்களை உருவாக்கி அவர்களிற்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார் .
இவர் தொழில்துறையினரின் உதவியோடு நெசவுதறிகளை பெற்றுக்கொடுத்து பல பெண்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டினார் என்றால் மிகையாகாது, இவரின் திறமையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக செல்வி அக்சயா ஜெயதரன் என்கின்ற இலண்டனில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும்மாணவி தனது பகுதிநேரவேலையில் சிறுகச்சிறுக உழைத்து சேமித்த நிதியில் தனது மாமாவான அமரர் திரு. பகீரதன் நடராஜன் நினைவாக £1000 ஆயிரம் பவுண்களை தந்து உதவியுள்ளார்.
இந்த நிதியில் அச்சுதன் நெசவுசாலையி்ல் இணைந்து பணியாள்றிவரும் பெண்களை உற்சாகப்படுத்தி வேலைகளை விரைவாக்கவும், விரிவுபடுத்துவதற்குமாக இலத்திரனியல் இயந்திரம்பூட்டிய நெசுவு தறி வழங்கப்பட்டது, இந்த தறிவழங்கும் நிகழ்வில் எமது மதிப்பிற்குரிய பொருளாளரும், சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபருமாகிய கௌரவ திரு. சி. திரிகரன் அவர்களும், புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான செல்வி. து. திலகவதி, செயலாளர் மதிப்பார்ந்த கருணாமாஸ்ரர், இணைப்பாளர் திரு. வி.சு. விஜயலாதன் மற்றும் Go natural private LTD இன் உரிமையாளர் திரு. ஞானமூர்த்தி ( ரகு) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பங்குபற்றிய அனைவருக்கும் இதயபூர்வநன்றிகளைத்தெரிவிப்பதோடு, வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளிற்கு எமது மொழி, கலாச்சாரத்தை சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமல்லாது எமது தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பும் உங்களுடையது என சொல்லிவளர்க்கும் திரு. திருமதி . ஜெயதரன் போன்ற பெற்றோர்களை இதயபூர்வமாக வணங்கிநிற்பதோடு அமரர். பகீரதன் நடராஜன் அவர்களின் ஆத்ம சாந்திக்கும் எமது நிறுவனம் சார்பாக பிராத்திக்கின்றோம்.







Previous Post
