Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூகநிலையத்தின் பரிசளிப்புவிழா

நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூகநிலையத்தினால் நடாத்தப்பட்ட கலை கலாசாரப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்புவிழா 26.12.25 அன்று சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் நடாத்திவைக்கப்பட்டது.

பரிசுபெற்ற பிள்ளைகளுக்கான பரிசுப்பொருட்களாக கற்றல் உபகரணங்களை எமது நிறுவனத்தால் வழங்கிவைத்தோம்.

இதற்கு நிதிப் பங்களிப்புச் செய்தோர் Furuset ஒன்றிய மகளிர் அத்துடன் நோர்வே நண்பர்கள். இவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்விலே புதிய வாழ்வு நிறுவனத்தின் உபசெயலாளர் திரு கருணாகரன் பிரதம விருந்தினராகவும் எமது இணைப்பாளர் திரு. விஜயலாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்கள்.

Comments are closed.