Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்கள்!!

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது”
திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் மூன்றாம், நான்காம், ஐந்தாம் கொடுப்பனவானது,
1) திரு . இ. ரகுபதிதாஸ் ( விழிப்புலன் அற்றவர் , ஊர்காவற்துறை)
2) திருமதி. ந.ரேவதி ( வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் , முள்ளியவளை)
3) திரு.சசிகரன் ( வாய் பேசமுடியாதவர் சரவணை)
ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாவினை பெற்று, தமது சுயதொழில்களான கோழிவளர்ப்பு, அசோலா வளர்ப்பு , மேலதிக கோழிகள், தீவனம் போன்றவற்றை பெற்று, மிக உற்சாகமாக தொழிலில் ஈடுபடுவதோடு, சசிகரன் என்பவர் நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஒலிபெருக்கியையும் அதற்கு தேவையான பொருட்களையும் பெற்று மனைவியின் துணையுடன் முயற்சிகளில் ஈடுபடுகின்றார் என்பதை கூறிக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம் ,

உதவியைப் பெற்றுக்கொண்ட குடும்பங்கள் , உதவியை வழங்கிய திரு.சிவசாமி ஆசிரியர் குடும்பத்திற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக உதவிசெய்யும் நல்லதொரு சந்தர்ப்பத்தை எமது நிறுவனத்திற்கு வழங்கிய திரு. சிவசாமி ஆசிரியரின் மகன் திரு .பிறேம் அவர்களுக்கு இதய பூர்வநன்றிகளைத்தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம்.🙏.

Comments are closed.