மிகச்சிறந்த முயற்சியாளன் கேதீஸ்வரனை உற்சாகமூட்டுங்கள்!!
“உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.”
எமது நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட மிகச்சிறந்த முயற்சியாளனே கேதீஸ்வரன் 👏👏👏
இவர் ஒரு கண்ணையும் இரண்டு கைகளையும் இழந்தபோதும் , மிகுந்த தன்னம்பிக்கையோடு தனக்கு கிடைத்த சிறிய உதவியைப்பயன்படுத்தி பெரும்வெற்றியைப்பெற்று எமது நிறுவனத்துக்கு பெருமைதேடித்தந்ததோடு மட்டுமல்லாது, பார்ப்போரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இவரைப்போன்று உதவிகளைப்பெற்றுக்கொள்ளும் அனைத்து முயற்சியாளர்களும் முயன்றால், வாழ்வில் வெற்றி என்பது மிகஅருகிலேதான்.
இந்தப்பதிவை பார்க்கும் அனைவரிடமும் மிகதாழ்மையாக நிறுவனம் சார்பாகவும், முயற்சியாளன் கேதீஸ் சார்பாகவும் கேட்டுக்கொள்வது, 👍 பண்ணுவது மட்டுமன்றி, உங்களது உறவுனர்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதன்மூலம் கேதீஸை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாது, இவரைப்போன்று விசேட தெவைஉடையோரை மிகவும் உற்சாகப்படுத்தி முயலவைக்கும் என்பதை நாம் நம்புகின்றோம். நன்றி 🙏

Previous Post
Next Post
