Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தண்ணீர் என்பது வெறும் தேவையல்ல — அது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமை!
தையிட்டி கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றுக்குத் தீர்வு காணும் நோக்குடன், எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா இயக்குநர்கள் உதவ முன்வந்துள்ளனர்.

அதன் அடிப்படையில், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த திரு. நல்லதம்பி விஜயகுமார் மற்றும் திருமதி ம. கஸ்தூரி ஆகிய இரு குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், அவர்களின் வீட்டுத் தோட்டச் செய்கையையும் ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு குழாய்க் கிணறுகளை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

இதன்மூலம் இக்குடும்பங்களின் தண்ணீர்ப் பிரச்சினையை ஓரளவேனும் நிவர்த்தி செய்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையையும் நிம்மதியையும் ஏற்படுத்த முடிந்துள்ளமையால் மகிழ்வடைகின்றோம்.

இத்திட்டத்திற்கான முழுமையான நிதிப் பொறுப்பை எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா இயக்குநர்களும், அவர்களுடன் மனிதநேயப் பயணத்தில் இணைந்துள்ள திரு. ஜெயக்குமார், திரு. குமார் மற்றும் திரு. பாஸகரதாஸ் ஆகிய மனிதநேயச் சிந்தனையாளர்களுக்கும் இதயபூர்வநன்றிகளைத்தெரிவித்து நிற்கின்றோம்.
ஒரு கிணறு வெறும் நீரை மட்டும் வழங்குவதில்லை; ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும், எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது.

Screenshot

Screenshot

Screenshot

Screenshot

Comments are closed.