இலண்டனுக்கு ஏற்றுமதியாகும் அன்பளிப்பு மடல்கள் !
புதிய வாழ்வு நிறுவனமானது பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலைத்திட்டங்களின் பின்னாலும் பல பெண்களின் முயற்சிகளும், அர்ப்பணிப்புக்களும் நிறைந்துள்ளது.
அந்த வகையில், திருமதி கபில்ராஜ் வேனுஜா அவர்களின் “Wonderful Craft” என்ற அமைப்பின் அழகிய கைவினைப் பொருட்களின் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இந்த முயற்சியின் முதல் கட்டமாக, காதலர் தினத்திற்கான சில அன்பளிப்பு மடல்கள் இலண்டனில் உள்ள கென்ற் தபால் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் பல வர்த்தக நிறுவனங்களுடனும் தபால் நிலையங்களுடனும் எமது சந்தைப்படுத்தல் பிரிவு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து மடல்கள், வாழ்த்து அட்டைகள், அன்பளிப்பு பெட்டிகள், சுவர் அலங்காரங்கள், வீடுகளை அலங்கரிக்கக்கூடிய அழகிய வர்ணப் படங்கள் ஆகியவை Wonderful Craft மூலம் வடிவமைக்கப்படுகின்றன.
அத்துடன், இலண்டனில் உள்ள சில வணிக நிறுவனங்களும் எமது அழகிய வாழ்த்து அட்டைகள் மற்றும் அழைப்பிதழ்களை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. இது திருமதி வேனுஜாவின் கைவண்ணத்தின் சிறப்பை வெளிப்படுத்துகின்றது என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறாக எமது பெண்களின் கைவினைப் பொருட்கள் எமது தேசமான இலங்கையிலிருந்து கடல்கடந்து வெளிநாடுகளுக்கு சென்றடைய ஒரு வாய்ப்பை உருவாக்க முடிந்தது என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
பெண்களின் திறமையும் உழைப்பும் உலகம் அறிய எமது பயணம் தொடர்கிறது.






Previous Post
