யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றாற்றாளர் தினம்
2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாற்றாற்றலை அணுகுதல் மற்றும் உள்ளீர்த்தலுக்கான குழுவினர் ஏற்பாட்டில் மாற்றாற்றாளர் தினம் 05-03-25 புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத்தலைவர் திருமதி கோசலை மதன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்தது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களும் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களும் கலந்துகொள்ள, ஏனைய துணைசார் விரிவுரையாளர்கள் மற்றும் பீடங்களின் பீடாதிபதிகள், சமூகசேவைத்திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந் நிகழ்வானது புதிய வாழ்வு நிறுவனத்தின் பிரித்தானிய மற்றும் நோர்வேக்கிளையின் நிதி அனுசரனையுடன் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.
இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதற்கு புதிய வாழ்வு நினுவனம் தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்க வரும் என்பதில் ஐயமில்லை.
புதிய வாழ்வு நிறுவனமானது இந்நிகழ்வை நிகழ்த்தி வைக்க நிதிப் பங்களிப்புச் செய்த அனைத்து புலம் பெயர் உறவுகளுக்கும் கரம்பற்றி எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒற்றுமையே எமது பலம் 🤝🤝


Previous Post
Next Post
