மின்சார இணைப்பிணை பெற்றுக்கொள்வதற்காக மின்சார வயர்தொகுதி வழங்கிவைப்பு!
மன்னார் மாவட்டம் குமுழமுனைப்பகுதியில் வசிக்கும் திருமதி. செ.வசந்தகுமாரி அவர்களின் விடாமுயற்சியில், மேலும் 5 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நோக்கில்,புதிதாக நிறுவப்பட்ட *தேங்காய் எண்ணை உற்பத்தி செய்யும்* நிலையத்திற்கான மின்சார இணைப்பிணை பெற்றுக்கொள்வதற்காக இரண்டு இலட்சத்தி முப்பத்தொண்பதாயிரத்தி எண்நூறு *ரூபா (239,800.00)* பெறுமதியில் *16mm திறனுடைய 200 மீற்றர்* நீளமான மின்சார வயர்தொகுதியானது, புதிய வாழ்வு நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
மேற்படி தொழிற்சாலையானது 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது என்பது ஆளுமையின் உச்சக்கட்டம். சிறந்த வழிகாட்டலால் வெற்றிமேல் வெற்றிவந்துசேரவும், பெண்களை தனித்துவமாக வாழ வழிகாட்டும் வசந்தகுமாரியை பாராட்டுவதில் மனமகிழ்வடைகின்றது புதிய வாழ்வு நிறுவனம்.
மேற்படி செயற்றிட்டத்திற்கு நிதி உதவி செய்த டுபாய் நாட்டில் வசிக்கும் *திரு.நந்தன் (பொறியியலாளர் )மற்றும் அவரின் நண்பர் திரு.ஜெகன் குணரட்ணம் , அமரர். நந்தினி அன்பழகன் அவர்களின் நினைவாக அவரின் குடும்பத்தினர் இனணந்து வழங்கியிருந்தார்கள். தாயக மக்களின் நலனில் அக்கறைகொண்டு இவ்வாறான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இவ் ஆதரவினை வழங்கிய திரு.நந்தன், ஜெகன் குணரட்ணம் அவர்களுக்கும் அமரர். நந்தினி அன்பழகன் குடும்பத்தினருக்கும் புதிய வாழ்வு நிறுவனம் சார்பாகவும் எபிநேசர் தொழிற்சாலையின் தலைமை நிர்வாகி சார்பாகவும் பயனடையும் குடும்பங்கள் சார்பாகவும் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்🙏
சுத்தமான தேங்காய் எண்ணெய், தும்புஉற்பத்திகள், கால்மிரிகள், விளக்குமாறு, கயிறு என்பன மொத்தமாகவும் சில்லறையாகவும் உங்கள் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்வதன் மூலம், ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்





Previous Post
Next Post
