மகேசன் சுப்பிரமணியம் அவர்களின் இலங்கை விஜயத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு!!
புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு. மகேசன் சுப்பிரமணியம் அவர்கள், கடந்த வாரம் எமது தேசத்திற்கு சென்று, எமது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்பார்வை செய்ததார்,
அத்துடன் மஸ்கெலியா எனும் இடத்தில் சிறுவர்களுக்கான சேமி்ப்புத்திட்டத்தை வழங்கியதோடு, அம்பாறை மாவட்டத்தில் விவசாய ஊக்குவிப்பிற்காக விதைதானியங்களை வழங்கி, தன்னிறைவு காண்பதற்கான சில ஆலோசனைகளையும் கூறி, மக்களோடு கலந்துரையடாடினார்,
பின்னர் முல்லைத்தீவில் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களை தனது சொந்த நி்தியிலேயே ஏற்பாடு செய்திருந்தார், மிகச்சிறப்பாகச்செயல்பட்ட திரு. சு. மகேசன் அவர்களிற்கு பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் சார்பாகவும், கிளி நொச்சி தலைமைக்காரியாலயம் சார்பாகவும் , நலன் பெற்ற மக்கள் சார்பாகவும் வாழ்த்துவதில் மனமகிழ்வடைகின்றோம்🙏





Previous Post
Next Post
