Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

6ம் ஆண்டு நிறைவுதினமும் பட்டம் பெற்ற மாணவப்பிரதிநிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும்!!

எமது நிறுவனத்தின் 6ம் ஆண்டு நிறைவுதினமும், எம்மோடு பயணிக்கும் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் 30/10/22 அன்று மிகச்சிறப்பாக செங்கலடி மட்டக்களப்பில் இடம் பெற்றது,

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மீன்வளத்துறை பணிப்காளர் கிழக்குமாகாணம் மதிப்பிற்குரிய திரு. S. சுதாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, மக்கள் நலன் காப்பகம் நிறைவேற்று இயக்குனர் திருமதி. பி. உதயகுமாரி, மற்றும் திரு. சி. நடனேஸ்வரன், புதிய வாழ்வு நிறுவன நிறைவேற்று இயக்குனர் திருமதி. புனிதவதி நடனேஸ்வரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்து, மாணவர்களை வாழ்த்தியதோடுமட்டுமன்றி, புதிய வாழ்வு நிறுவனத்தின் கொடிஏற்றப்படு , நிறுவனத்திற்கான கீதமும் முதன்முதலாக இசைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ,விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து மாணவப்பிரதிநிதகளுக்கும், அரச அதிகாரிகளிற்கும், இந்நிகழ்வு சிறப்புற நடந்தேற சகலவழிகளிலும் உதவிபுரிந்த அனைவருக்கும் குறிப்பாக அழகானமுறையில் ஏற்பாடுசெய்த செல்வி விஜி கிழக்குமாகாணப்பிரதிநிதி, மற்றும் நிகழ்வின் தலைவரும் , மாணவப்பிரதிதிமிகளின் தலைவரும், இணப்பாளருமான திரு. வி. விஜயலாதன் அவர்களிற்கும் நன்றிகளைத்தைரிவித்துக்கொள்கின்றோம்🙏

மேலும் 10 ம் மாதம் இடம்பெற்ற சில நிகழ்வுகளின் தொகுப்பும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

Comments are closed.