யாழ் பல்கலையில் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி!!
யாழ் பல்கலைக்கழக அனைத்து பீடங்களுக்கும், இடையேயான மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியானது, சமூகவியல் துறையினரின் ஏற்பாட்டிலும், புதியவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்களின் நிதிப்பங்களிப்பிலும், யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கடந்த 13/03/22 அன்று மிகச்சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக சர்வதேச மற்றும் தேசிய துடுப்பாட்ட சங்கங்களின் மத்தியஸ்தர்களான கெளரவ சென நந்தவீர மற்றும் கெளரவ ரியோன் விஜயவர்த்தன ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ்வாறான எமது நிகழ்வுகளாவன எமது நிறுவனத்திற்கு அர்ப்பணிப்போடு செயல்படும் மாணவப்பிரதிநிதிகளை உற்சாகப்படுத்துவதோடு, மட்டுமன்றி இன, மத, வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையான கல்விச்சமூகம் ஒன்றினை உருவாக்கவேண்டும் என்பதேயாகும்🙏
நிகழ்வில் இருந்து சில பதிவுகளைத்தருகின்றோம்..
நிகழ்வை ஏற்பாடு செய்த சமூகவியல் துறை மாணவர்களுக்கும், மற்றும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறுவதோடு, நிதிப்பங்களிப்பு செய்த இயக்குனர் திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெருவித்துக்கொள்கின்றோம்🙏🙏





Previous Post
Next Post
