ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள்!!
இயலாமையை இயலுமானவரை முயன்று, வெற்றி பெற வைப்பதே எமது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் எமது நோக்கத்திற்கு பாரிய அளவில் கைகொடுக்கும் மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட முயற்சியாளர்கள் முறையே..
1) திருமதி. நேசராசா சுகந்தினி இவர் மன்னார் முருங்கனைச்சேர்ந்த முயற்சியாளர் இவர்ஒரு காலை இழந்த நிலையிலும் எமது நிறுவனத்தில் 6 மாதங்கள் தங்கி இருந்து தையல் பயிற்சி பெற்று, தற்போது தையலை அடிப்படையாகக்கொண்டு வாழ்வாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதோடு, மேலதிகமாக தோட்டவேலைகளிலும் ஆர்வம் இருப்பதால் இந்த சிறந்த முயற்சியாளருக்காக ஒரு இலட்சம் ரூபா திரு. ஜயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
2) திரு. அ. சாந்தகுமார் இவர் சிதம்பரபுரம் வவுனியாவைச்சேர்ந்தவர் , இந்த முயற்சியாளன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தன் விடா முயற்சியால் சிறிய கடை ஒன்றை நடத்திவருகின்றார், அவரின் முயற்சிக்கு உறுதுணையாக, திரு. ஜயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
3) திருமதி.அ. வனிதாமணி இவர் கரவெட்டியைச்சேர்ந்த பெண்தலைமைத்துவகுடும்பம். இவருக்கு கணனித்துறையில் திறமையிருந்தும், தேவையான உபகரணங்கள் இல்லாததால் தொழிலை தொடரமுடியாது கைவிட்டிருந்தார் , ஐயாவின் உதவித்திட்டம் மூலம் பெற்ற ஒரு இலட்சம் ரூபாவில் மீண்டும் தனது வேலையை சந்தோசமாக ஆரம்பித்துள்ளார்.
4) சி. சுமதி இவர் பண்டத்தரிப்பைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பம் , இவருக்கு வாழ்வாதாரமாக தையலும், தோட்டமும் செய்வதற்காக ஐயாவின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
5) திரு. கந்தையா கனகரூபன் இந்த முயற்சியாளன் தனது வலது கண்பார்வையை முற்றுமுழுதாக இழந்ததோடு, மற்றையகண்பார்வையிலும் தெளிவின்மை இருப்பதனால் வேறு எங்கும் வேலை செய்ய முடியாத காரணத்தால், குடும்பத்தாரின் உதவியுடன் விவசாயம் செய்ய முயற்சிப்பதால் திரு. திரு ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது.
எந்த வித எதிர்பார்ப்புக்களும் இன்றி மக்களின் எதிர்காலம் சிறக்கவேண்டும் என்பதற்காக, எமது நிறுவனத்தின் ஊடாக சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதி உதவி செய்துவரும் திரு. சி. பிறேம் அவர்களுக்கு இதய பூர்வ நன்றிகளை நிறுவனம்சார்ந்தும், முயற்சியாளர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.🙏🙏.





Previous Post
Next Post
