அமெரிக்கா நாட்டில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் 5 மாணவர்களின் உதவியில் வைத்தியசாலை!!
புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், பின்தங்கிய கிராமமான பள்ளிக்குடியிருப்பு தோப்பூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டும், Dr. அபிலாசினியின் கனவை நனவாக்கும் நோக்கிலும் இத்திட்டமானது உருவாக்கப்பட்டது,
இத்திட்டத்தின் சிறப்பானது, அமெரிக்கா நாட்டில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் 5 மாணவர்கள், தமது பகுதிநேர உழைப்பிலேயே இத்திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர் என்பது மிகப்பெரிய பாராட்டிற்குரியது 👏👏
இந்த ஐந்து மாணவர்களினதும் செயலுக்கு எமது நிறுவனம் இதய பூர்வநன்றிகளைத்தெரிவுத்துக்கொள்வதோடு, Dr. அபிலாசாவின் சேவையானது அவரது கிராமமக்களுக்கு மொழி, இன, மத வேறுபாடுகள் இன்றி கிடைக்கவேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்🙏

Previous Post
Next Post
