முதலாவது அறுவடையிலேயே ரூபா 80,000 இலாபமாக பெற்ற சசிகால!!
மலையகமக்கள் கடும் உழைப்பாளிகள் என கேள்விப்பட்டிருக்கின்றோம், அதை முல்லோயாவைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான திருமதி. சசிகலா எமக்கு நிரூபித்துக்காட்டி இருக்கின்றா,
சென்ற வருடம் விவசாய ஊக்குவிப்பாக கொடுத்த 20,000/- ரூபாவில் முதலாவது அறுவடையிலேயே 80,000/- ரூபாவை இலாபமாக பெற்று, தனது விவசாய நடவடிக்கைகளை மேலும் விஸ்தரித்துள்ளதாக, பெருமையுடனும் நன்றியுடனும் எமது மாணவப்பிரதிநிதிகளுக்கு தகவல் கொடுத்துள்ளா,
இதுவே எமது நிறுவனத்தின் கனவு .. சிறிய உதவியுடன், பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சி , மிகத்திறம்பட ஆலோசனைகளும், மேற்பார்வையும் செய்த மாணவப்பிரதிநிதி திரு. விஜயகுமாரிற்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் நிறுவனத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம்👏👏👏🙏.
இவ்வாறான செயல்திட்டங்களை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வதன்மூலம் இன்னொருவரின் வெற்றிக்கு நீங்களும் துணையாகுங்கள் 🙏

Previous Post
Next Post
