நாலு குழந்தைகளுடன் தண்ணீருக்காக நீண்டகாலம்போராடிய குடும்பத்திற்கு உதவிகள்!!
“ நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு “
முள்ளியவளையில் நாலு குழந்தைகளுடன் தண்ணீருக்காக நீண்டகாலம்போராடிய, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு எமது பல்கலைக்கழக மாணவன் பிரசாந்தின்தலையீட்டால் தண்ணீர்பிரச்சனை தீர்ந்து வைக்கப்பட்டதுடன், வறுமையைப்போக்க அவர்களின் சொந்த காணியிலேயே வீட்டுத்தோட்டம் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி தண்ணீர் இறைக்கும் இயந்திரமும் வழங்கிவைக்கப்பட்டதுடன், மாணவர்களின் கல்விக்கு கைகொடுக்குமுகமாக கல்வி உபகரணங்களும், துவிச்சக்கரவண்டியும் மாணவப்பிரதிநிதியால் வழங்கிவைக்கப்பட்டது,
முன்னின்று செயல்படுத்திய பிரசாந்திற்கு பாராட்டுக்கள்.👏👏,
இந்ததிட்டத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்த எமது நிறுவனத்தின் கனடா நாட்டு பிரதிநிதி சௌதா துஸ்யந்தனிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்🙏👏👏





Previous Post
Next Post
