ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்கள்!!
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.”
மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டமானது, அவரின் அன்புமகனால் எமது நிறுவனத்தினூடாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த ஆனந்தத்துடன் அறியத்தருகின்றோம் ,
அந்தவகையில் முதலாவது குடும்பமாக திருகோணமலையைச்சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ,மூன்று குழந்தைகளைக்கொண்ட குடும்பம் ஒன்றிற்கு , அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோழிக்கூடும், குஞ்சுகளும், தேவையான சிலபொருட்களும் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தை பொறுப்பைடுத்து வெற்றிகரமாக முடித்துக்கொடுத்த எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி சுகாசிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏
எமது மாணவர்கள் படிக்கும்போதே இவ்வாறான சமூகவேலைகளில் ஈடுபட்டு, மக்களின் நலன் கருதிசெயல்படுவது நல்லதொரு எதிர்காலம் அமையும் என்பதை கூறிநிற்கின்றது.
குறிப்பாக இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறுவோர், பெண்தலமைத்துவ குடும்பங்களும், விசேட தேவை உடைய குடும்பங்களுமே ஆகும்.
திட்டம் வெற்றிபெற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது நிறுவனத்தின் சார்பில்நன்றிகள்🙏



Previous Post
Next Post
