Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

எமது பராமரிப்பு இல்லத்தில் மருத்துவ குணமுள்ள முள்ளு சீத்தாபழம் நடுகை!!

வெளி நாடுகளில் , மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்படும் இந்த பழமானது, எமது நாட்டில் எமது கைகளில் கிடைத்த பொக்கிசம் என்பது இதுவரை தெரியாமல்போனது துரதிஸ்டமே , தேடுவார் அற்றும் , எந்த வித பராமரிப்பு இன்றியும் இருந்தும் கூட காய்த்து குலுங்கி எமக்கு நன்மை செய்ய காத்திருக்கும் அருமருந்து, இவை முக்கியமாக, புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்மா போன்றவற்றை விரட்டி அடிக்கக்கூடிய வல்லமை கொண்டது என ஆய்வுகள் கூறுகின்றது , இவற்றை போன்ற மருத்துவ குணமுள்ள, எமது நாட்டில் அழிவடைந்து செல்கின்ற மர இனங்களை கண்டறிந்து ,அவற்றை உருவாக்கி மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் , மாணவப்பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் எமது பராமரிப்பு இல்லத்தில் இந்த மரங்கள் பதிவைக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவை படிக்கும் அனைவரும் எமது மாணவப்பிரதிநிதிகளுக்கு கைகொடுக்கு முகமாக, இதுபோன்ற பழவகைகளை ஏனைய பழங்கள் போல் அன்றாடம் உண்ணும் பழக்கத்தை கொண்டுவருவதோடு, விதைகளைப்பதிவைத்து அனைவருக்கும் கொடுப்பதன்மூலம் கொடிய நோய்களை விரட்டி அடிக்க உதவுங்கள், 🙏

முடிந்தவரை இந்த பதிவை பகிர்ந்து , மக்களுக்கு இந்த பழத்தின் மருத்துவ குணத்தை சென்றடைய உதவுமாறு அன்புடனும் , உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்🙏

Comments are closed.