தேவன் கோவில் மணி ஓசை
எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கொள்கைகளில், வளர்ந்து வரும் நம் தாயகத்துக்கலைஞர்களை, ஊக்குவித்து உற்சாகப்படுத்தி , அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதும் ஒன்றாகும் , எனவே நீங்கள் தேடித்திரியத்தேவையில்லை , எமது நிறுவனத்தால் இயலுமான அளவிற்கு தாயகத்தில் இருக்கும் கலைஞர்களை உங்கள் முன் இத்தளத்தினூடாக கொண்டுவருகின்றோம்,
இதன்மூலம் வெளிநாடுகளில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் அமைப்புக்கள் , தாயக்க்கலைஞர் ஒருவருக்காவது சந்தர்ப்பம் கொடுக்குமாயின், நாம் கலைகள் தொடர்பாக வைத்திருக்கும் கொள்கையில் வெற்றி அடைந்தவர்களாவோம் , எனவே எம் இனிய உறவுகளே காலம் காலமாக திறமைகளை தமக்குள்ளே புதைத்துக்கொண்டு சந்தர்ப்பம் இன்றி மாண்டவர்போக, இருப்போருக்கு கைகொடுத்து ஏனைய நாடுகளில் வாழும் கலைஞர்கள்போன்று எம் தாயக்க்கலைஞர்களை வளர்த்துவிடுவது எமது கடமை என நினைப்போர், இந்த நிகழ்வை பாருங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்வது மட்டுமன்றி உங்களது உற்சாகமூட்டக்கூடிய கருத்துக்களையும் முன்வைக்குமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்,
எமது முதலாவது முயற்சியாக, தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியனின் சகோதரன் குகன் இவரும் இசையமைப்பாளர் என்பதோடு இசைப்பிரியனின் வழிகாட்டியும் கூட , எனி வரும் காலங்களில் எமது கலைஞர்களின் சொந்தப்படைப்புக்களையும் இந்த தளத்தின் ஊடாக வெளிக்கொணர்வதற்கு தீர்மானித்துள்ளோம் , எல்லாமும் எமது உறவுகளான இரசிகர்கள் உங்களது கையில்தான் உள்ளது,
எனவே பாருங்கள், கருத்துதெரிவியுங்கள், பகிருங்கள் எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி

Next Post
