நாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைக்க வேண்டும்!
ராஜூ எமது நிறுவனத்தின் செல்லப்பிள்ளை, இறுதியுத்தத்தால்இடது காலும், இடதுகையும் பாதிப்புக்கு உள்ளானவன், பெரிதாக எதையும் செய்ய முடியாவிட்டாலும் , எந்த நேரமும் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்கவேண்டும் என்ற அவா உடையவன்…
இதோ அவனின் சின்னதோட்டம், காலையும் மாலையும் தவறாது தண்ணிவிடுவான், நிறுவனத்தில் இருக்கும் வேலையாட்கள் யாரையாவது பிடித்து பசளை போடுவான், கத்தரிகாய்த்துவிட்டது என்று மட்டற்ற மகிழ்ச்சி ராஜூவுக்கு…
இந்தப்பதிவை எமது பக்கத்தில் பதிவிடுவதற்கு ஒரு காரணம் உண்டு.. எமது தேசத்தில் எல்லோரது வீட்டிலும் போதியளவு இடமுண்டு,உடல்நிலை நல்ல நிலையில் இருந்தும், தண்ணிவளம் இருந்தும் , எத்தனைபேர் பயன்படுத்துகிறீர்கள்..🤔 தயவு செய்து நேரத்தையும் , காலத்தையும் வீணாக்காது , நாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு 🙏
எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எமது பயனாளிகளின் அயராத , உழைப்பே காரணம் 😍



Next Post
