Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

கிணறு நிர்மானிக்கப்பட்டது

புதிய வாழ்வு நிறுவனத்தின் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ், வடக்கு வாகரைப்பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பனிச்சங்கேணி எனும் கிராமசேவகர் பிரிவில், நடுக்குடியிருப்பு எனும் கிராமத்தில் 12 குடும்பங்களுக்கான நீர்த்தட்டுப்பாடானது ஒரு நீண்ட தேவையாகவே இருந்தது, நீர்த்தேவையைப்பூர்த்தி செய்யும் நோக்கிலும், தூர இடங்களிற்கு தண்ணிக்காகச்செல்வதால் ஏற்படும் சிரமங்களைத்தவிர்க்கும் நோக்கிலும் கிணறானது புதிய வாழ்வு நிறுவனத்தால் நிர்மானிக்கப்பட்டது, இந்தக் கிணற்றை நிர்மானிப்பதற்கான அனுமதியைத்தந்துதவிய பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. K. அமலினி அவர்களிற கும், கிராமசேவை உத்தியோகத்தர் அவர்களுக்கும், இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு நிதி உதவிசெய்த திரு. கலாமோகன் அவர்களிற்கும், இத்திட்டத்தின் களப்பணியைச் சிறப்புற செய்துதந்த பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி செல்வி விஜிதா அவர்களுக்கும், இத்திட்டத்தின்கான நிதி ஏற்பாட்டைச்செய்துதந்த பிரித்தானியா இயக்குனர் திரு.தர்மலிங்கம் பிரபாகரன் அவர்களுக்கும், இத்திட்டம் தொடங்கி முடியும் வரையிலான தொடர்பாடல், கணக்கறிக்கை என்பவற்றை சமர்ப்பித்த புதிய வாழ்வு நிறுவனத்தின் தலைவர் திரு. சு. துஸ்யந்தன் அவர்களுக்கும், மேற்பார்வை செய்த உபசெயலாளர், இணைப்பாளர் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்து நிற்கின்றோம் 🙏
புதிய வாழ்வு நிறுவனம்
இயக்குனர் சபை ..
பணிகள் தொடரும் ..

நடுக்குடியிருப்பு எனும் கிராமத்தில் 12 குடும்பங்களுக்கானது
100%