குழாய்க்கிணறு நிர்மாணம்
30 வருடங்களின் பின்னர், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சில கிணறுகள் மூடப்பட்ட நிலையிலும், சிலகிணறுகள் பாவிக்கமுடியாத நிலைகளிலும் இருப்பதால், மீளக்குடியேறியும் தொடரும் துன்பத்திற்கு எம்மாலான உதவிகளைச்செய்ய வேண்டுமென, எமது நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. வி. விஜயலாதன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தையிட்டி புண்ணியார்வீதியைச் சேர்ந்த பெண்தலைமைக்குடும்பமான திருமதி. மல்லிகாதேவி தேவராசா அவர்களிற்கு, எமது நிறுவனத்தின் நீர்வழங்கல்த்திட்டத்தின் கீழ் குழாய்க்கிணறு ஒன்று வெட்டி, மோட்டார் பூட்டி அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்காகவும், கையளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியை தையிட்டியைச்சேர்ந்த திரு. சின்னத்துரை சாந்தகுமார் அவர்களும், அவரது நண்பர்களான ரமேஸ், சாந்தரூபன், ராஜேந்திரத்துடன் இணைந்து எமது நிறுவனத்திற்கு வழங்கியிருந்தனர், தொடர்ந்து எமது நிறுவனத்தின் செயற்பாடுகளிற்கு நிதி ஏற்பாடுகளைச்செய்துதரும் சாந்தன் அண்ணா அவர்களிற்கும், அவரின் நண்பர்களுக்கும் இதயபூர்வ நன்றிகளைத்தெரிவிப்பதோடு, தேவைகளைக்கண்டறிந்து எமக்கு உடனுக்குடன் அறியத்தருவதுடன், அத்திட்டம் தொடர்பான அறிக்கைகளைச்சமர்ப்பிக்கும், திட்ட இணைப்பாளர் திரு. வி. விஜயலாதன் மற்றும், உபசெயலாளர் திரு. செ. கருணாகரன் ஆகியோருக்கும் இதயபூர்வ நன்றிகளைத்தெரிவித்து நிற்கின்றோம் 👍🙏
இயக்குனர் சபை
புதிய வாழ்வு நிறுவனம்…
