நீரினால் மலர்ந்த புதிய வாழ்வு - குடும்பத்திற்கும் கல்விக்கும் உதவி!
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.”
முள்ளியவளையில் தண்ணீருக்காக போராடிய நாலு குழந்தைகளுடன் வாழும் ஒரு வறுமைக்கோட்டுக்கீழ் உள்ள குடும்பம், நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. நமது பல்கலைக்கழக மாணவர் பிரசாந்தின் தன்னார்வத் தவணையால், அந்த குடும்பத்தின் தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
குடும்பத்திற்குப் பயன்படத் தக்க வகையில் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டதுடன், சொந்த காணியில் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், அந்த குடும்பத்தின் குழந்தைகளின் கல்வியை ஆதரிக்க கல்வி உபகரணங்களும் துவிச்சக்கரவண்டியும் வழங்கியதை மனமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
இந்த திட்டத்திற்கான நிதியை பங்களித்த எமது நிறுவனத்தின் கனடா நாட்டு பிரதிநிதி சௌதா துஸ்யந்தன் அவர்களுக்கு நன்றிகள் பலவும் பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிறோம். இதனை முன்னின்று செயல்படுத்திய பிரசாந்தின் அர்ப்பணிப்புக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்!